Thursday, 23 January 2014

அமைதியின் தூதர்

         நமது பள்ளியில் அமைதியின் தூதர்களுக்கான (MoP )விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார் .நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மோகன் குமார் ,தேசிய மாணவர் படை அலுவலர் பால சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சாரண ஆசிரியர் முத்துக் குமரன் அனைவரையும் வரவேற்றார். 

     





        
  பின்பு  சாரணீயம் ,அதன் சேவைகள் ,உலகை முன்னேற்ற அமைதியின் தூதர்கள் திட்டம் மூலம் அது உலகெங்குமுள்ள சாரணர்களை எவ்வாறு ஒருங்கிணைக்கிறது ...இன்னும் இவ்வுலகை தரமானதாக மாற்ற சாரணர்களின் பங்கு என சாரனியத்தின் செயல்பாடுகள் குறித்து எடுத்துக் கூறினார்.சாரணர்கள் ஒவ்வொருவரும் தன ஒரு அமைதியின் தூதனாக இருப்பதில் பெருமை கொள்ளவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.      

         அனைத்தையும்  கேள்வியுற்ற தலைமை ஆசிரியர் சாரனியத்தின் செயல்பாடுகள் குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும் சாரனியதின் அமைதி தூதர் திட்டத்தில் ஓர் அங்கமாக தாமும் தம் பள்ளியும் விளங்குவதில் பெருமை கொள்வதாகவும் கூறினார்.சாரணர்கள் அனைவரும் இதனைக் கேட்டு மகிழ்ச்சியுற்றனர்.பின்னர் சிறப்பு விருந்தினர்களும் சாரணர்களும் அமைதித் தூதர்களுக்கான சின்னத்தை தமது கரங்களில் அபிநயித்து மகிழ்ந்தனர்.

No comments:

Post a Comment